ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

திருமகள் கேள்வனான ஸ்ரீமந்நாராயணன் அநேகமாயிரம் ஆவரணங்களினால் அலங்கரிக்கபட்டு விளங்காநின்ற மீட்சியில்லாத நலமிந்தமில்லதோர் நாடான ஸ்ரீவைகுண்டம் என்னும் திவ்ய நகரத்திலே இரண்டு உலகமும் அதாவது ஈரேழ் பதிநான்கு உலகமும் ஒரு மூலையிலே அடங்கும்படி இடமுடைத்தாய் அளவிடமுடியாத ஆனந்தமயமான திருமாமணி மண்டபத்திலே அனைத்து உலகத்தையும் நியமிக்கும் தொழிலாக வகுப்புண்ட அற்புதமான கோப்புடைய சீரிய சிங்காசனத்தில் பன்னிரண்டு இதழ்களுடைய நானா சக்திமயமான திவ்ய பொற்றாமரைப் பூவின் இதழ்களில் விசித்திரமான திவ்யலோக அதிசேஷன் மேல் அநேகமாயிரம் சந்திரர்களை உருக்கி வார்த்தாற் போலே குளிர்ந்த புகரையுடைத்தான திருமேனியையுடையவனாய் சகல கல்யாண குணங்களுக்கு இருப்பிடமானவனாய் திருஅனந்தாழ்வானாகிய அனையிலே வெள்ளிமலையின் உச்சியில் அனேகமாயிரம் சூரியர்கள் உதித்தாற் போலே இருக்கிற ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேஷன் சோதி மண்டலத்தின் நடுவே அருள் தேவியர்களான திருமகள், மண்மகள், ஆய்மகள் போன்ற பிராட்டிமார்களுடன் மத்தியில் மூன்று மின்னற்கொடிகளோடு கூடிய பற்பல தாமரை பூத்த ஒரு காலமேகமானது வெள்ளிமலை போல் சகல தாபங்களும் ஆறும்படியான சுடர்சோதிபோல் ஆதியந்சோதி கரிய கோல திருவுருவத்தோடு எழுந்தருளியிருக்கிற நிலைகளிலே தாம் விளையாடுவதற்காக ஒரு உலகை உண்டாக்க வேண்டும் என்ற நினைவோடு அங்கிருந்து பாற்கடல் வந்து சேர்ந்தான்.

ஸ்ரீÀÃÁÀ¾ ¿¡¾ý   ஸ்ரீ„£Ã¡ô¾¢ ¿¡¾ý  ( À¡ü¸¼ø)

மேலும்